மோகன்லாலுடன் இணைந்து நடிக்கவில்லை : ராணா

தினமலர்  தினமலர்
மோகன்லாலுடன் இணைந்து நடிக்கவில்லை : ராணா

ஜூனியர் என்.டி.ஆருடன் ஜனதா கேரேஜ் எனும் தெலுங்கு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. ராணா நாயகனாக நடிக்கும் சரித்திர திரைப்படத்தில் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்தன. இது குறித்து ராணா கூறுகையில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என ஆசை உள்ளது ஆனால் சரித்திர படத்தில் இணைந்து நடிப்பதாக வெளிவரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவித்துள்ளார். ராணா நடிப்பில் பாகுபலி-2, ஹசி, லீடர் -2 போன்ற படங்கள் வரிசையாக திரைக்கு தயாராகி வருகின்றன.

மூலக்கதை