டைகர் ஷெரப்பை கொல்ல விரும்பும் -திஷா

தினமலர்  தினமலர்
டைகர் ஷெரப்பை கொல்ல விரும்பும் திஷா

பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் ஹீரோயின்களில் திஷா பட்டானியும் ஒருவர். தற்போது இவர், இயக்குநர் நீரஜ் பாண்டே இயக்கத்தில் வெளியாக உள்ள எம்.எஸ் தோனி படத்தில் பிரியங்கா ஜா என்ற பெயரில் தோனியின் காதலியாக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு படத்தின் புரொமோஷனில் பத்திரிக்கையாளர்கள், திஷாவிடம் எந்த நடிகரை உங்களுக்கு திருமணம் செய்ய, கொல்ல, நட்பு கொள்ள ஆசை என்று கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த திஷா....."எனக்கு ரன்பீர் கபூரை திருமணம் செய்ய ஆசை, வருண் தவான் உடன் நட்பு கொள்ள விருப்பம், டைகர் ஷெரப்பை கொல்ல வேண்டும், ஏனென்றால் அவரை பல பேர் புகழ்பாடி புகழ்பாடி, அதை கேட்டு கேட்டு நான் சோர்வடைந்துவிட்டேன்" என்றார்.

திஷா நடித்துள்ள எம்.எஸ்.தோனி படம் நாளை மறுநாள் வெளியாக இருக்கிறது.

மூலக்கதை