ரன்பீருக்கு தந்தை ரிஷி கபூர் தந்த அறிவுரை

தினமலர்  தினமலர்
ரன்பீருக்கு தந்தை ரிஷி கபூர் தந்த அறிவுரை

பாலிவுட்டின் மாஜி ஹீரோ ரிஷ கபூர். கபூர் குடும்பத்தில் வந்த இவர் ஒருகாலத்தில் முன்னணி நடிகராக இருந்தார். தற்போது இவரது மகன் ரன்பீர் கபூர் சினிமாவில் அசத்தி கொண்டிருக்கிறார். ரன்பீர் கபூர் நேற்று தனது 34-வது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ரிஷி கபூர், டுவிட்டரில் தன் மகனுக்கு ஒரு டுவிட்டுடன் கூறிய அட்வைஸ் கொடுத்து உள்ளார்.

அதன் விபரம் வருமாறு..."இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ரன்பீர். கடவுளின் ஆசீர்வாம் உனக்கு என்றும் இருக்கும். உன்னை நினைத்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். உன் வேலைகளை மட்டும் நீ பார் " என்று கூறியிருக்கிறார்.

ரன்பீர் கபூர், தற்போது இயக்குநர் கரண் ஜோஹர் இயக்கத்தில் ‛ஏ தில் ஹே முஷ்கில்' படத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோருடன் நடித்துள்ளார். ‛ஏ தில் ஹே முஷ்கில்'படம் அடுத்த மாதம் 28-ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியாக இருக்கிறது.

மூலக்கதை