வடகொரியா உறவை முறித்துக்கொள்ள அமெரிக்கா உலக நாடுகளுக்கு வேண்டுகோள்

தினத்தந்தி  தினத்தந்தி
வடகொரியா உறவை முறித்துக்கொள்ள அமெரிக்கா உலக நாடுகளுக்கு வேண்டுகோள்


உலக நாடுகளின் எதிர்ப்பையும், ஐ.நா. எச்சரிக்கையையும் மீறி வட கொரியா தொடர்ந்து அவ்வப்போது அணு ஆயுத சோதனையை நடத்தி வருகிறது.  இதனால் உலக நாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளன. வட கொரியா 5-வது அணுகுண்டு சோதனைக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்  வட கொரியாவுடனான உறவை உலக நாடுகள் முறித்து கொள்ள வேண்டும், என அமெரிக்க வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

இது குறித்து அமெரிக்கத் தூதர் டேனியல் ரசல் தயாரித்திருக்கும் அறிக்கை ஒன்றில் இந்த விவரம் இடம்பெற்று உள்ளது. செனட் சபையிடம் ஒப்படைப்பதற்காக அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. வடகொரியா,தூதரக உறவுகளை முக்கியமாகக் கருதுவதால் அந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாகத் ரசல் அதில் கூறி உள்ளார்..

தற்போது, 160உக்கும் மேற்பட்ட நாடுகளுடன் வடகொரியா தூதரக உறவைக் கொண்டுள்ளது. வடகொரியாவுக்குக் கூடுதல் நெருக்கடி கொடுக்கும்படி ரசல் சீனாவிடம் வலியுறுத்தியிருக்கிறார்.

வடகொரியாவுக்கு எதிரான தடைகளை மீறிய சந்தேகத்தின் பேரில் சில சீன நிறுவனங்கள்மீது அமெரிக்கா விசாரணை நடத்திவருவது குறிப்பிடதக்கது.

மூலக்கதை