மாவட்டந்தோறும் டிஜிட்டல் இந்தியா வங்கிகள் : ரவிசங்கர் பிரசாத்

தினமலர்  தினமலர்
மாவட்டந்தோறும் டிஜிட்டல் இந்தியா வங்கிகள் : ரவிசங்கர் பிரசாத்

புதுடில்லி : அடுத்த சில ஆண்டுகளில் நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை ட்ரில்லியன் டாலர் அளவிற்கு உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடந்த இணைய ஆளுகை மற்றும் சைபர் பாதுகாப்பு குறித்த 3 நாள் கருத்தரங்கை துவக்கி வைத்து ரவிசங்கர் பிரசாத் உரையாற்றினார். அப்போது அவர், உலக இணையதள சந்தையில் இந்தியா சுமார் ரூ.1.33 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பாவிற்கு அடுத்து ஸ்டார்ட்அப் நாடுகள் வரிசையில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் தான் பேஸ்புக், கூகுள், வாட்ஸ்ஆப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.
இந்தியாவில் உள்ள 400 மில்லியன் இணையதள இணைப்புக்களில் 60 சதவீதம் ஸ்மார்ட்போன்கள் மூலம் பெறப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் கனவு திட்டமான டிஜிட்டல் இந்தியா திட்டம் ஏழைகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதுடன், பொருளாதார வளர்ச்சியையும் பெருக்கும். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக டிஜிட்டல் இந்தியா வங்கிகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த வங்கிகள் தபால் நிலையங்கள் மூலம் செயல்படுத்தப்படும். ஐடி சாப்ட்வேர் துறையிலம் இந்தியா அதிவேகமாக முன்னேறி வருவதால், மொபைல் உற்பத்தி ஆலைகளை அதிகம் ஏற்படுத்தி, ஐடி ஹார்டுவேர் துறையை பலப்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது என்றார்.

மூலக்கதை