வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடர்: ஒயிட் வாஷ் செய்தது...

தினத்தந்தி  தினத்தந்தி
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடர்: ஒயிட் வாஷ் செய்தது...

அபு,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி துபாயில் சுற்றுப்பயணம் செய்து பாகிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் பங்கேற்று விளையாடியது. மூன்று 20 ஓவர் போட்டித்தொடர்கள் கொண்ட இந்த  தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் முறையே 9 விக்கெட்டுகள் மற்றும் 16 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. 
இந்த நிலையில், மூன்றாவது மற்றும் இறுதி 20 ஓவர் போட்டி நேற்று துபாயில் உள்ள  ஷேக் சையது மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட் செய்ய பணித்தது. இதன் படி முதலில் பேட்டிங்கை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 
இதையடுத்து எளிய இலக்குடன் பேட்டிங்கை துவக்கிய பாகிஸ்தான் அணி 15.1 ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில்  பாகிஸ்தான் ஒயிட் வாஷ் செய்தது. 

மூலக்கதை