அமேசான் வர்த்­த­கத்தை முறி­ய­டிக்க பிளிப்­கார்ட்டில் வால்மார்ட் முத­லீடு

தினமலர்  தினமலர்
அமேசான் வர்த்­த­கத்தை முறி­ய­டிக்க பிளிப்­கார்ட்டில் வால்மார்ட் முத­லீடு

புது­டில்லி : வால்மார்ட் நிறு­வனம், பிளிப்­கார்ட்டில், 100 கோடி டாலர் முத­லீடு செய்ய திட்­ட­மிட்­டுள்­ளது.
பிளிப்­கார்ட்டின், இணை­ய­த­ளத்தை பயன்­ப­டுத்­துவோர் எண்­ணிக்கை, 10 கோடியை தாண்­டி­யுள்­ளது. இதை­ய­டுத்து, இந்­தி­யாவில், இணை­ய­தள வணி­கத்தில், அந்த நிறு­வனம் முன்­ன­ணியில் உள்­ளது. சமீ­பத்தில், அந்த நிறு­வ­னத்தின் மதிப்பு, 160 கோடி டாலரை தாண்­டி­யுள்­ளது.
வால்மார்ட், மிட்டல் பார்தி என்­டர்­பி­ரைசஸ் உடன் இணைந்து, இந்­தி­யாவில், 10 ஆண்­டு­க­ளுக்கு முன், சில்­லரை வணி­கத்தில் நுழைந்­தது. கடந்த, 2013ல், வால்மார்ட், தனி­யாக சில்­லரை வணி­கத்தில் ஈடு­பட முடிவு செய்­தது. இந்த நிலையில், அந்த நிறு­வனம், பிளிப்­கார்ட்டில், 100 கோடி டாலர் முத­லீடு செய்ய திட்­ட­மிட்­டுள்­ள­தாக தகவல் வெளி­யாகி உள்­ளது. இதன் மூலம், இரு நிறு­வ­னங்­களும், இணை­ய­தள வணிக நிறு­வ­ன­மான, அமே­சானை எதிர்­கொள்ள முடிவு செய்­துள்­ள­தாக தெரி­கி­றது.

மூலக்கதை