பங்கு வெளி­யீட்டில் கள­மி­றங்கும் செக்­யூ­ரிட்டி அண்ட் இன்­டெ­லிஜன்ஸ்

தினமலர்  தினமலர்
பங்கு வெளி­யீட்டில் கள­மி­றங்கும் செக்­யூ­ரிட்டி அண்ட் இன்­டெ­லிஜன்ஸ்

புது­டில்லி : பாது­காப்பு தீர்­வுகள் மற்றும் அது சார்ந்த வர்த்­தக சேவையில், செக்­யூ­ரிட்டி அண்ட் இன்­டெ­லிஜன்ஸ் நிறு­வனம் ஈடு­பட்டு வரு­கி­றது.
இந்­தியா மட்­டு­மின்றி ஆஸ்­தி­ரே­லி­யா­விலும், வர்த்­தகம் மேற்­கொண்டு வரும் இந்­நி­று­வனம், பங்கு வெளி­யீட்டில் கள­மி­றங்க திட்­ட­மிட்­டுள்­ளது. இந்த பங்கு வெளி­யீட்­டிற்கு அனு­மதி கோரி, அது தொடர்­பான ஆவ­ணங்­களை, பங்குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’­­­யிடம் இந்­நி­று­வனம் அளித்­துள்­ளது. ‘செபி’ அனு­மதி அளிக்கும் பட்­சத்தில், இந்­நி­று­வனம், பங்கு வெளி­யீடு மேற்­கொள்ளும். பங்கு வெளி­யீட்டின் மூலம், இந்­நி­று­வனம், 500 கோடி ரூபாய் திரட்ட திட்­ட­மிட்­டுள்­ளது.
இத்­தொ­கையை, பழைய கடன்­களை திரும்பத் தரவும், நடை­முறை மூல­தனத் தேவை­களை சமா­ளிக்­கவும், இதர நிர்­வாக செயல்­பா­டு­க­ளுக்கும், இந்­நி­று­வனம் பயன்­ப­டுத்திக் கொள்ளும். இந்­தாண்டு, 21 நிறு­வ­னங்கள் புதிய பங்கு வெளி­யீ­டு­களை மேற்­கொண்டு குறிப்­பி­டத்­தக்க அள­விற்கு நிதி திரட்டிக் கொண்­டுள்­ளன.

மூலக்கதை