திண்டுக்கல், திருச்சி பயணிகள் ரயில்களில் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைப்பு

தினமணி  தினமணி

மதுரை- திண்டுக்கல்- மதுரை மற்றும் திண்டுக்கல்- திருச்சி- திண்டுக்கல் பயணிகள் ரயில்களில் இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் இரண்டு நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விநாயகர் சதுர்த்தி மற்றும் ஆசிரியர் தினத்தையொட்டி திங்கள்கிழமை (செப். 5) வண்டி எண்.56700 மதுரை- புனலூர் விரைவு ரயில், கேரள மாநிலத்தில் உள்ள அமரவில்லா ரயில் நிலையத்தில் தாற்காலிகமாக ஒரு நிமிடம் மட்டும் நின்று செல்லும்.

பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு: வண்டி எண்.56708/56707, மதுரை- திண்டுக்கல்- மதுரை பயணிகள் ரயிலில் இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் இரண்டு நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது. இதன் முதல் சேவை மதுரையில் இருந்து செப்டம்பர் 5 ஆம் தேதி முதலும், திண்டுக்கல்லில் இருந்து செப்டம்பர் 9 ஆம் தேதியும் தொடங்கும்.

வண்டி எண்.56704/56703, திண்டுக்கல்- திருச்சி- திண்டுக்கல் பயணிகள் ரயிலில் இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் இரண்டு நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் சேவை திண்டுக்கல்லில் இருந்து செப்டம்பர் 6 ஆம் தேதியும், திருச்சியில் இருந்து செப்டம்பர் 8 ஆம் தேதியும் தொடங்கும்.

வண்டி எண்.56713/56712, திருச்சி-பாலக்காடு டவுன்- திருச்சி பயணிகள் ரயிலில் இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் இரண்டு நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளன. இதன் முதல் சேவை திருச்சியில் இருந்து செப்டம்பர் 6 ஆம் தேதியும், பாலக்காடு டவுனில் இருந்து செப்டம்பர் 7 ஆம் தேதியும் தொடங்கும்.

வண்டி எண்.56714/56711, திருச்சி- காரைக்கால்- திருச்சி பயணிகள் ரயிலில் இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் இரண்டு நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளன. இதன் முதல் சேவை திருச்சி மற்றும் காரைக்காலில் இருந்து செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் தொடங்கும்.

மூலக்கதை