இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு ஆறுதல் வெற்றி

தினமணி  தினமணி
இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு ஆறுதல் வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து-பாகிஸ்தான் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டி கார்டிஃப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் அபாரமாக ஆடி 87 ரன்களும் (89 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்ஸர்) பென் ஸ்டோக்ஸ் 75 ரன்களும் (76 பந்து, 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) சேர்த்தனர். 50 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் குவித்தது.

இதைத் தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணியில் சோயிப் மாலிக் (77 ரன்கள்), கேப்டன் சர்பிராஸ் அகமது (90 ரன்கள்) ஆகியோர் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். இதனால் அந்த அணி 48.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. முன்னதாக நடைபெற்ற 4 ஆட்டங்களிலும் பாகிஸ்தான் அணி பரிதாபமாக தோற்றது. இந்நிலையில் கடைசி ஆட்டத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.

மூலக்கதை