வார்னர் சதம்: 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

தினமணி  தினமணி
வார்னர் சதம்: 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

இலங்கைக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டேவிட் வார்னர் சதமடிக்க 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் பங்கேற்றது. இதன் கடைசி ஒரு நாள் போட்டி பல்லகெல்லேவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் தனஞ்ஜெய டி சில்வாவும், தனுஷ்கா குணதிலகாவும் ஓரளவுக்கு நிதானமாக ஆடி முறையே 34, 39 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்தவர்களில் மென்டிஸýம் (33 ரன்கள்), சஜித் பதிரானுவும் (32 ரன்கள்) மட்டும் குறிப்பிடத் தகுந்த வகையில் ரன் சேர்த்தனர். மற்றவர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.

முடிவில் 34.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி 195 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 196 ரன்களை இலக்காக கொண்டு ஆஸ்திரேலிய அணி, 43 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது.

இதன்மூலம் அந்த அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் அபாரமாக ஆடி சதம் விளாசினார். இதேபோல் நடுவரிசையில் களமிறங்கிய ஜார்ஜ் பெய்லி 44 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு உதவினார்.

மூலக்கதை