அமெரிக்க ஓபன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் செரீனா

தினமணி  தினமணி
அமெரிக்க ஓபன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் செரீனா

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இதேபோல், ஆடவர் பிரிவில் வாவ்ரிங்கா, ஆன்டி முர்ரே ஆகியோரும் 4-ஆவது சுற்றை எட்டியுள்ளனர்.

ஆண்டின் இறுதி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் கடந்த 29-ஆம் தேதி தொடங்கியது. 6-ஆவது நாளான சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் 3-ஆவது சுற்றில் உலகின் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், சுவீடனின் ஜோகன்னா லார்சன்னை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில், 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ஜோகன்னாவை, செரீனா எளிதில் தோற்கடித்தார். இதன் மூலம் மகளிர் பிரிவில் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் அதிக வெற்றியை (307) பெற்ற மார்ட்டினா நவரத்லோவாவின் சாதனையை அவர் கடந்தார்.

ஆபூர்வ நிகழ்வு: அதேநேரத்தில் ஆண்கள் பிரிவில் ரோஜர் ஃபெடரரின் வெற்றிகளின் எண்ணிக்கையையும் செரீனா நேர் செய்துள்ளார். இதுகுறித்து செரீனா கூறுகையில், "ஒரே நேரத்தில் ஆண்கள் - பெண்களின் பிரிவில் வெற்றிகளின் எண்ணிக்கையை சமன் செய்வது என்பது அபூர்வமாக நடக்கக் கூடிய ஒரு நிகழ்வு. தொடர்ந்து இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த விரும்புகிறேன். இது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது' என்றார்.

செரீனா தனது 4-ஆவது சுற்றில் கஜகஸ்தானின் யாரோஸ்லாவா ஷிவிடோவாவை எதிர்கொள்கிறார். சீனாவின் ஹாங் சூ வை 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் யாரோஸ்லாவா வீழ்த்தினார்.

மகளிர் பிரிவில் நடைபெற்ற இதர ஆட்டங்களில் வீனஸ் வில்லியம்ஸ், ஸ்பெயினின் கர்லா சௌரஸ் நவரோ, ருமேனியாவின் சிமோனா ஹாலேப், போலந்தின் அக்னீஸ்கா ரத்வான்ஸ்கா ஆகியோர் வெற்றிபெற்று 4-ஆவது சுற்றுக்குள் நுழைந்தனர்.

வாவ்ரிங்கா, முர்ரேவுக்கு சவால்: ஆடவர் பிரிவில், 3-ஆவது சுற்றில் இரு முறை கிராண்ட் ஸ்லாம் சாம்பியனும், அமெரிக்க ஓபனில் இருமுறை அரையிறுதி வரை முன்னேறியவருமான சுவிட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா, பிரிட்டனின் டான் இவான்ûஸ எதிர்கொண்டார்.

இந்தப் போட்டி, காண்போருக்கு மிகுந்த ஆவலை ஏற்படுத்துவதாக இருந்தது. சர்வதேச தரவரிசையில் 64-ஆவது இடத்தில் இருக்கும் இவான்ஸ், தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருக்கும் வாவ்ரிங்காவுக்கு கடும் சவால் அளித்தார்.

முதல் செட்டை (4-6) இவான்ஸýம், அடுத்த செட்டை (6-3) வாவ்ரிங்காவும் கைப்பற்றினர். 3, 4-ஆவது செட்களில் "டை பிரேக்கர்' வரை சென்ற வாவ்ரிங்கா, அவற்றை முறையே 6-7 (6/8), 7-6 (10/8) என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். இதையடுத்து 5-ஆவது செட்டில் இவான்ஸ் களைப்படைந்ததால், 6-2 செட் என்ற கணக்கில் வாவ்ரிங்கா வெற்றியை வசப்படுத்தினார்.

இதன் பின்னர் அவர் கூறுகையில், "ஒவ்வொரு புள்ளியாக ஆட்டத்தை வெற்றியில் முடித்தது மகழ்ச்சியளிக்கிறது. இது சிறந்த வெற்றி என்பது மட்டும் உறுதி' என்றார்.

கைரிகோஸ் விலகல்: வாவ்ரிங்கா தனது 4-ஆவது சுற்றில், உக்ரைனின் இலியா மார்சென்கோவுடன் மோதுகிறார். அவர், மார்சென்கோ, தனது முந்தைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் நிக் கைரிகோûஸ எதிர்கொண்டார். 4-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் மார்சென்கோ முன்னிலையில் இருந்தபோது, கைரிகோஸ் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார்.

வாவ்ரிங்காவைப் போல் மற்றொரு முன்னணி வீரரான பிரிட்டனின் ஆன்டி முர்ரேவும் போராடியே வெற்றிகண்டார். அவர், இத்தாலியின் பாலோ லோரென்சியிடம் 7-6 (7/4), 5-7, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் மல்லுக்கட்டியே வெற்றி பெற முடிந்தது. முர்ரே தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோ எதிர்கொள்கிறார்.

நிஷிகோரி முன்னேற்றம்: டிமிட்ரோவ், தனது 3-ஆவது சுற்றில் போர்ச்சுகலின் ஜோ ஸýவாவை 6-4, 6-1, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். இதேபோல், தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருப்பவரான ஜப்பானின் கீ நிஷிகோரி, 4-6, 6-1, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் பிரான்சின் நிக்கோலஸ் மகத்தை வெளியேற்றினார்.

ஆடவர் பிரிவின் இதர ஆட்டங்களில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீம், ஆர்ஜென்டீனாவின் ஜூகன் மார்ட்டின் டெல், குரோஷியாவின் இவோ கர்லோவிச் ஆகியோரும் வெற்றிபெற்று 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

மூலக்கதை