ஏஐடிஏ வாழ்நாள் தலைவராக அனில் கன்னா தேர்வு

தினமணி  தினமணி

அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் (ஏஐடிஏ) கெளரவ வாழ்நாள் தலைவராக அனில் கன்னா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற ஏஐடிஏவின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தின்போது அனில் கன்னா கெளரவ வாழ்நாள் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

அனில் கன்னா, ஆசிய டென்னிஸ் சம்மேளனத்தின் தலைவராகவும், சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

லோதா கமிட்டியின் அறிக்கையை ஆய்வு செய்து விளையாட்டு வழிகாட்டு நெறிமுறையை உருவாக்கும் வரை கெளரவ தலைவர் பதவியை ஏற்க முடியாது என அனில் கன்னா தெரிவித்துள்ளார்.

ஏஐடிஏவில் ஏற்கெனவே எஸ்.எம்.கிருஷ்ணா, யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் கெளரவ வாழ்நாள் தலைவராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர 2016 முதல் 2020 வரையிலான காலத்துக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அனீல் மஹாஜன், பாரத் ஓஸா, சின்டான் என்.பாரீக், சி.எஸ்.சுந்தர் ராஜூ, மஜ் தல்பிர் சிங், தீபேந்தர் ஹூடா, எம்.ஏ.அழகப்பன், பிரவீண் மஹாஜன், ராஜன் காஷ்யப், சத்ருகன் சின்ஹா ஆகியோர் துணைத் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஹிரோன்மாய் சாட்டர்ஜி பொதுச் செயலராகவும், சுமன் கபூர், அனில் துபார் ஆகியோர் இணை செயலராகவும், ராக்டிம் சாய்கியா பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மூலக்கதை