டிஎன்பிஎல்: கோவை வெற்றி

தினமணி  தினமணி

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை சூப்பர்ஜயன்ட்ஸ் அணியைத் தோற்கடித்தது லைக்கா கோவை கிங்ஸ்.

திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த கோவை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. அந்த அணியில் தருண் ஸ்ரீனிவாஸ் 45, ரோஹித் 40, சூர்யபிரகாஷ் 36, முகமது ஆட்டமிழக்காமல் 27 ரன்கள் எடுத்தனர்.

மதுரை தரப்பில் தியாகராஜன் 2 விக்கெட் எடுத்தார்.

பின்னர் பேட் செய்த மதுரை அணி 20 ஓவர்களில் 7விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அருண் கார்த்திக் 44 பந்துகளில் 3 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் குவித்தார்.

கோவை தரப்பில் முகமது, விக்னேஷ் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

மூலக்கதை