22,000 கார்களை திரும்பப் பெறுகிறது ஜெனரல் மோட்டார்ஸ்

தினமணி  தினமணி
22,000 கார்களை திரும்பப் பெறுகிறது ஜெனரல் மோட்டார்ஸ்

ஜெனரல் மோட்டார் இந்தியா நிறுவனம் அதன் ஷெவர்லே க்ரூஸ் கார்களில் உள்ள உதிரிபாக குறைபாடுகளை சரி செய்து தருவதற்காக 22,000 கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 2011 வரையில் தயாரித்து விற்பனை செய்யப்பட்ட ஷெவர்லே க்ரூஸ் வகை கார்களில் இக்னிஷன் அமைப்பில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்தக் கோளாறை சரிசெய்து தருவதற்காக 22,000 கார்களை திரும்பப் பெற ஜெனரல் மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் முன்னரே பதிவு செய்து கொண்டு, அருகில் உள்ள ஷெவர்லே சேவை மையங்களுக்குச் சென்று தங்களது காரை ஆய்வுக்குட்படுத்தி, பழுதான பாகங்களை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம் என ஜெனரஸ் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

மூலக்கதை