மேற்கு வங்காளத்தின் பெயர் ‘பங்களா’ என மாற்றம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது

தினத்தந்தி  தினத்தந்தி
மேற்கு வங்காளத்தின் பெயர் ‘பங்களா’ என மாற்றம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கான தீர்மானத்தை அம்மாநில சட்டசபையில் மாநில சட்டசபைத்துறை மந்திரி பார்த்தா சட்டர்ஜி நேற்று தாக்கல் செய்தார். மேற்கு வங்காளத்தின் பெயர் வங்காள மொழியில் ‘பங்களா’ என்றும், ஆங்கிலத்தில் ‘பெங்கால்’ என்றும், இந்தியில் ‘பங்கால்’ என்றும் மாற்றப்படுவதாக தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. குரல் ஓட்டெடுப்பில், தீர்மானத்துக்கு 189 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவும், 31 எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர். இதனால், தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. சட்டசபையில் பேசிய முதல்–மந்திரி மம்தா பானர்ஜி, ‘பங்களா என்ற பெயர் வரலாற்று பின்னணி கொண்டது’ என்று கூறினார்.

மேலும், பெயர் மாற்றத்துக்கு பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறுவதற்காக, மத்திய அரசை வற்புறுத்துவோம் என்றும் அவர் கூறினார். இந்த பெயர் மாற்றத்துக்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்தது. காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு செய்தது. இடதுசாரி உறுப்பினர்கள் தீர்மானத்தில் திருத்தம் கோரினர்.

மூலக்கதை