வியாழனை நெருங்கியது நாசாவின் ஜூனோ விண்கலம்

தினமலர்  தினமலர்
வியாழனை நெருங்கியது நாசாவின் ஜூனோ விண்கலம்

வாஷிங்டன்: வியாழன் கிரகத்தை ஆராய நாசாவால் அனுப்பப்பட்ட ஜூனோ என்ற விண்கலம் வியாழனுக்கு மிக அருகே நெருங்கி விட்டதாக நாசா அறிவித்துள்ளது.


அமெரிக்க விண்வௌி ஆய்வுமையம் நாசா கடந்த கடந்த 2011ம் வருடம் ஆகஸ்ட் 5ம் தேதி வியாழன் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக ஜூனோ என்று பெயரிடப்பட்ட விண்கலத்தை அனுப்பியது. அது நேற்று வியாழனை அதிக பட்சமாக நெருங்கி விட்டது. இந்த விண்கலம் வியாழன் குறித்த தகவல்களை பூமிக்கு அனுப்புவதற்கு கிட்டதட்ட தயாராகி விட்டது.


வாயுக்களால் ஆன சூரிய குடும்பத்திலேயே மிகப் பெரிய கோளான வியாழனுக்கு மேலே சுமார் 4500 கி.மீ., தூரத்தில் அது அந்த கிரகத்தை சுற்றி வர ஆரம்பித்துள்ளது. வியாழன் கிரகத்தை ஜூனோ விண்கலம் நெருங்கிய போது அது மணிக்கு 2,08000 கி.மீ.,வேகத்தில் பயணித்ததாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.


இன்னும் ஒரு சில தினங்களில் வியாழன் கிரகம் பற்றிய ரகசியங்கள் மற்றும் தகவல்களை புவிக்கு அனுப்பும் என நாசா விஞ்ஞானி ஸ்காட் பால்டன் தெரிவித்துள்ளார். இதுவரை இல்லாத அளவுக்கு வியாழன் கிரகங்களின் துருவப்பகுதி மற்றும் மையப்பகுதி குறித்த முக்கிய தகவல்கள் இதன் மூலம் பெற முடியும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விண்கலம் 2018ம் ஆண்டு வரை வியாழன் கிரகத்தை ஆராய்ந்து பூமிக்கு தகவல்களை அனுப்பும்.

மூலக்கதை