துப்பாக்கிச் சூடு பீதி: அமெரிக்க விமான நிலையம் தாற்காலிக மூடல்லாஸ்

தினமணி  தினமணி
துப்பாக்கிச் சூடு பீதி: அமெரிக்க விமான நிலையம் தாற்காலிக மூடல்லாஸ்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகர விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு சப்தம் கேட்டதால் எழுந்த பதற்றத்தையடுத்து அந்த விமான நிலையம் தாற்காலிகமாக மூடப்பட்டது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கலிஃபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரிலுள்ள சர்வதேச விமான நிலையம், ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

அப்போது அந்தப் பகுதியில் துப்பாக்கியால் சுடுவதைப் போன்ற சப்தம் கேட்டதைத் தொடர்ந்து, விமான நிலையத்திலிருந்தவர்கள் அலறியடித்தபடி ஓடினர்.

இதையடுத்து அந்த விமான நிலையத்தின் மையப் பகுதியில், பயணிகள் வந்து போகும் பகுதி மூடப்பட்டது.

மேலும், அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்த போலீஸார், துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டதா என்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், மக்களை பீதிக்குள்ளாக்கிய அந்த இரைச்சல் துப்பாக்கிச் சப்தமல்ல என்பது உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அந்த விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது. சப்தத்தை எழுப்பியவர் என்ற சந்தேகத்தின் பேரில், "úஸாரோ' முகமூடி வீரனைப் போல உடையணிந்திருந்த ஒருவரை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து விமான நிலையக் காவல்துறை வெளியிட்டுள்ள சுட்டுரை (டுவிட்டர்) பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையத்தில் எவரும் துப்பாக்கியால் சுடவில்லை. யாருக்கும் காயமும் ஏற்படவில்லை. எனினும் இது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வங்கதேசத் தாக்குதலில் ஐ.எஸ்.ஸுக்குத் தொடர்பு

வங்கதேசத்தில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கிறது.

தெற்கு ஆசியாவில் 8 அமைப்புகளுடன் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தொடர்பு வைத்திருப்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன.

வங்கதேசத்தில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களிலும் கணிசமான அளவுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் பங்கு உண்டு.

- ஜான் கெர்ரி, அமெரிக்க

வெளியுறவுத் துறை அமைச்சர்

 

நவம்பரில் புதிய அரசமைப்புச் சட்டம்

இலங்கையின் புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.

ஜனநாயகம், நல்லிணக்கம், வளர்ச்சி ஆகிய மூன்று அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் அந்த அரசமைப்புச் சட்டம், வரும் நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

- மங்கள சமரவீரா, இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர்

 

குற்றத்துக்கு எதிரான போரை படுகொலை என்று கூறக் கூடாது

நான் என்ன சிரியா அதிபர் அல்-அஸாத் போல குழந்தைகள் மீது "பேரல்' வெடிகுண்டுகளை வீசி கொலை செய்தேனா?

அல்லது ஐ.எஸ். பயங்கரவாதிகளைப் போல பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட மறுக்கும் பெண்களை உயிரோடு எரித்துக் கொன்றேனா?

நான் போதை மருந்துக் கடத்தல் குற்றவாளிகளுக்கு எதிராகப் போராடுகிறேன். இதை படுகொலை என்று கூறுவது தவறு.

- ரோட்ரிகோ டுடேர்தே,

பிலிப்பின்ஸ் அதிபர்

 

மூலக்கதை