தமிழகம் முழுவதும் 500 இடங்களில் ரூ 50 கோடியில் ஜிம் துவங்கபடும்… தமிழக அரசு..

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
தமிழகம் முழுவதும் 500 இடங்களில் ரூ 50 கோடியில் ஜிம் துவங்கபடும்… தமிழக அரசு..

தமிழக சட்டசபையில் 110விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிடுள்ள அவிப்பு:

ரூ.320 கோடி செலவில் தெரு விளக்குகள் எல்.இ.டி விளக்குகளாக மாற்றப்படும். தமிழகம் முழுவதும் 23 குறுகிய கால தங்கும் விடுதிகள் ரூ.11.62 கோடி செலவில் கட்டப்படும்…

அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்களின் உறவினர்கள் தங்குவதற்கு விடுதிகள்…

குடிநீர் மேம்பாட்டு திட்டங்கள் ரூ.3,229 கோடி செலவில் மேம்படுத்தப்படும்…

திருச்சி மாநகராட்சி மற்றும் 36 நகராட்சிகளில் ரூ.116 கோடி செலவில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்…

மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் ரூ.150 கோடியில் 1,25,352 தனிகுடியிருப்பு கழிப்பறைகள் கட்டப்படும் …

ரூ.21 கோடி செலவில் மொத்தம் 2,184 இருக்கைகள் கொண்ட சமுதாய கழிப்பறைகள் கட்டப்படும்…

பேரூராட்சிகளில் ரூ.108.18 கோடி செலவில் 90,150 தனிநபர் கழிப்பிடங்கள் கட்டப்படும்…

17.03 கோடி செலவில் 2,620 இருக்கைகள் கொண்ட சமுதாய கழிப்பிடங்கள் கட்டப்படும்…

கிராம ஊராட்சிகளில் அனைத்து வசதிகளும் கூடிய 500 பூங்காக்கள் அமைக்கப்படும்…

ஊரக பகுதிகளில் ரூ.50 கோடி செலவில் 500 உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்படும்…

ரூ.70 கோடி மதிப்பில் 1000 அங்கன்வாடி மையங்கள் கட்டப்படும்…

மூலக்கதை