இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : ரூ.67.18

தினமலர்  தினமலர்
இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : ரூ.67.18

மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பில் கடந்த வார சரிவே இந்த வாரமும் தொடர்கிறது. மாத இறுதி என்பதால் இறக்குமதியாளர்கள் மற்றும் வங்கிகள் இடையே அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் சரிவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது ரூபாய் மதிப்பு ரூ.67.18 ஆக இருந்தது. முன்னதாக கடந்த வார வர்த்தக நேர இறுதியில் ரூபாய் மதிப்பு 67.06 ஆக இருந்தது.

மூலக்கதை