இலங்கை - இந்தியா இடையே பாலம் அமைக்க தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை: சிறிசேன

BBC  BBC
இலங்கை  இந்தியா இடையே பாலம் அமைக்க தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை: சிறிசேன

இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையே பாலம் அமைப்பதற்கு எவ்விதமான தீர்மானமும் எடுக்கப்படவில்லை என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய போது, அவர் இதனை தெரிவித்தார்.

இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில் பாலமொன்று அமைக்கப்பட்டால், அதனை தகர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்று கூட்டு எதிர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான பாலமொன்றை நிர்மாணிக்க இலங்கை மற்றும் இந்திய அரசுகள் எந்த விதமான பேச்சுவார்த்தையையும் மேற்கொள்ளவில்லை என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு தேர்தலின் போது மக்களின் வாக்குகளை பெற சில தென் இந்திய அரசியல்வாதிகள் இவ்வாறான பாலமொன்று நிர்மாணிக்கப்படுமென்று வாக்குறுதிகளை வழங்கியதாக கூறிய ஜனாதிபதி சிறிசேன, இவ்வாறான கருத்துக்களை பயன்படுத்தி இலங்கை அரசியல்வாதிகள் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டினார்.

எனவே, இவ்வாறான பொய் பிரச்சாரங்களை நம்ப வேண்டாமென்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மூலக்கதை