பொதுமக்களின் நிலத்தை கடற்படையினருக்கு கொடுக்க முள்ளிவாய்க்கால் மக்கள் எதிர்ப்பு

BBC  BBC
பொதுமக்களின் நிலத்தை கடற்படையினருக்கு கொடுக்க முள்ளிவாய்க்கால் மக்கள் எதிர்ப்பு

முள்ளிவாய்க்கால் பகுதியில் வட்டுவாகல் என்னுமிடத்தில் பொதுமக்களின் காணிகளில் நிலைகொண்டுள்ள கடற்படையினருக்கு அந்தக் காணிகளை கையகப்படுத்துவதற்காக நில அளவை செய்யச் சென்ற அதிகாரிகள் அப்பிரதேச மககளினால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.

முள்ளிவாய்க்கால் கிழக்கில் வட்டுவாகல் என்னுமிடத்தில் 617 ஏக்கர் காணியை 3 ஆம் தேதி புதன்கிழமை முதல் 5 ஆம் தேதி வரையில் கடற்படையினருக்காக நில அளவை செய்யவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரச அளவையாளர் பா.நவஜீவன் அறிவித்திருந்தார்.

இந்தக் காணிகளுக்கு உரிமையாளர்கள் யாரேனும் இருந்தால் அவர்கள் உரிய ஆவணங்களுடன் நில அளவை செய்யும்போது அங்கு வருகை தந்து தமது காணிகளை அடையாளம் காட்டுமாறும் அவர் கோரியிருந்தார்.

இதனையடுத்து, தமது காணிகளை கடற்படையினரின் தேவைக்கு அளவீடு செய்ய அனுமதிக்கப் போவதில்லை என தெரிவித்து, காணி அளவீடு செய்யவிருந்த இடத்தில் கூடிய மக்கள் சுலோக அட்டைகளைத் தாங்கிய வண்ணம் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

அந்தக் காணிக்குரிய தமது ஆவணங்களையும் அவர்கள் அங்கு வருகை தந்திருந்த அதிகாரிகளிடம் காட்டியதையடுத்து நில அளவை அதிகாரிகள் நில அளைவப் பணிகளை மேற்கொள்ளாமல் திரும்பிச் சென்றனர்.

அத்துடன் தமது காணிகள் தங்களிடம் திருப்பி கையளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றும் முல்லைத்தீவு அரச அதிபருக்குக் கையளிப்பதற்காக அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டது,

இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் பங்கு கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் இந்த மகஜரின் பிரதிகள் வழங்கப்பட்டதாக ஆர்ப்பாட்டத்த்pல் ஈடுபட்டிருந்த கிராம முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

மூலக்கதை