உகாண்டாவின் தலைமை காவல் அதிகாரியை எதிர்த்து போராட்டம்

BBC  BBC
உகாண்டாவின் தலைமை காவல் அதிகாரியை எதிர்த்து போராட்டம்

கடந்த மாதம் எதிர்க்கட்சி போராட்டக்காரர்களை அடித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆளான உகாண்டாவின் தலைமை காவல் அதிகாரியை எதிர்த்து போரட்டம் செய்தவர்களை நீதிமன்ற வளாகத்தில் இருந்து கலவர தடுப்பு போலீசார் வெளியேற்றினர்.

உகாண்டாவின் தலைநகரான கம்பாலாவின் நீதிமன்ற வளாகத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் பதாகைகளை ஏந்தியபடியும், ஜெனரல் காலே காயிஹுராவிற்கு ஆதரவு தெரிவித்து கோஷமிட்டனர். ஜெனரல் காயிஹுரா மற்றும் ஏழு மூத்த அதிகாரிகள் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகவில்லை.

முன்னாள் அதிபர் வேட்பாளர் கிஸ்சா பேசிகையின் ஆதரவர்களுக்கு எதிராக காவல்துறை அத்துமீறலை அவிழ்த்துவிட்டதாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

மூலக்கதை