அலெப்போ நகரில் கடும் சண்டை

BBC  BBC
அலெப்போ நகரில் கடும் சண்டை

வடக்கு சிரியா நகரமான அலெப்போவில் போராளிகள் மற்றும் சிரியா அரசுப் படைகளுக்கு இடையில் பலத்த சண்டை தொடர்கிறது.

உணவு மற்றும் மருந்து சேமிப்புகள் தீர்ந்து விட்டதால், இந்த துப்பாக்கி சூட்டில் மாட்டிக்கொண்டுள்ள பொது மக்களுக்கு அச்சம் அதிகரித்து வருகிறது.

அவசர போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள ஐ.நா., இருபது லட்சத்துக்கும் அதிகமான மக்கள் குடிநீர் அல்லது மின்சாரம் இல்லாமல் இருப்பது பற்றி எச்சரித்துள்ளது.

அலெப்போ நகரத்தில் வேலைசெய்யும் ஒரு மருத்துவர் பி பி சியிடம் பேசுகையில், அவர் ஒரு நாளில் 150 காயம்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், இந்த எண்ணிக்கை, சமீப நாட்களில் இரண்டு மடங்காக அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மூலக்கதை