போர்க்குற்ற விசாரணை: சர்வதேச நீதிபதிகளை அழைக்க அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

BBC  BBC
போர்க்குற்ற விசாரணை: சர்வதேச நீதிபதிகளை அழைக்க அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

போர் குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச நீதிபதிகள் அழைக்கப்படுவர்களா எனபது குறித்து தெளிவுபடுத்தும்படி அரசாங்கத்துக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாதென்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பின் தலைவர் குணதாச அமரசேகர தாக்கல் செய்த மனுவொன்றை தள்ளுப்படி செய்த பின்னர் தலைமை நிதிபதி ஸ்ரீபவன் இதனை அறிவித்தார்.

போர் குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச நீதிபதிகளை அழைக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் இதுவரை இந்த தகவலை நிராகரிக்க தவறியுள்ளது.

எனவே, தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டத்தின் கீழ் இது குறித்து தெளிவுபடுத்தும்படி அரசாங்கத்துக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு மனு மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு அழைக்கப்பட்ட போது கருத்துக்களை தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர், தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும், அந்த சட்டம் இதுவரை அமல்படுத்தப்படவில்லை என்று கூறினார்.

எனவே இந்த மனுவை முன்கொண்டு விசாரணை செய்ய முடியாதென்று கூறிய அரச தரப்பின் வழக்கறிஞர் அதனை தள்ளுப்படி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொன்ற நீதிபதிகள் மனுவை தள்ளுப்படி செய்வதாக அறிவித்தனர்.

மூலக்கதை