பிரேசில்: டில்மா மீதான விசாரணையை தொடர பெரும்பான்மை எம்.பி.க்கள் ஆதரவு

BBC  BBC
பிரேசில்: டில்மா மீதான விசாரணையை தொடர பெரும்பான்மை எம்.பி.க்கள் ஆதரவு

பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட பிரேசில் அதிபர் டில்மா ருசெஃபின் மீதான உரிமை மீறல் விசாரணையை தொடர்வதற்கு ஆதரவு தெரிவித்து, அந்நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு செனட் உறுப்பினர்களுக்கும் அதிகமானோர் வாக்களித்துள்ளனர்.

நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமலே பணம் செலவழித்ததாகவும், கடந்த 2014 தேர்தலையொட்டி நாட்டின் தேசிய பட்ஜெட்டுக்கு புத்துணர்வளிக்க, அரசு வங்கிகளில் இருந்து அங்கீகரிக்கப்படாத கடன்களை பெற்றதாகவும் டில்மா மீது குற்றம் சாட்டப்பட்டது.

தற்போது நடைபெறும் விசாரணைக்குப் பிறகு, இது தொடர்பாக இன்னொரு வாக்கெடுப்பு நடத்தப்படும். அதில், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும்.

தான் தவறு செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை டில்மா மறுத்து வந்தாலும், அவரை பிரேசிலின் செனட் சபை கடந்த மே மாதத்தில் பதவி இடைநீக்கம் செய்தது.

மூலக்கதை