துப்பாக்கி உரிமம் சர்ச்சை: டொனால்ட் டிரம்ப் விளக்கம்

BBC  BBC
துப்பாக்கி உரிமம் சர்ச்சை: டொனால்ட் டிரம்ப் விளக்கம்

அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியின் சார்பாக போட்டியிடும் ஹிலரி கிளிண்டனுக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதமாக தான் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியதாக ஜனநாயக கட்சியினர் தெரிவித்தது குறித்து, குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் விளக்கமளித்துள்ளார்.

துப்பாக்கி உரிமம் வைத்திருக்கும் தனது ஆதரவாளர்கள், தங்கள் அரசியலமைப்பு உரிமையை ஒழிக்க முயலும் ஹிலரி கிளிண்டனைத் தடுக்க வேண்டும் என்று டிரம்ப் முன்னதாக வலியுறுத்தியிருந்தார்.

ஜனநாயக கட்சியை சார்ந்த செனட்டரான கிறிஸ் மர்பி, டிரம்பின் இந்தக் கருத்து ஒரு கொலை மிரட்டல் தான் என்று கூறினார்.

ஆனால், தான் அமெரிக்கர்கள் ஆயுதங்கள் வைத்துக் கொள்ளும் உரிமையை ஆதரிப்பவர்களின் அரசியல் பலம் குறித்து கருத்து தெரிவித்ததாக டிரம்ப் விளக்கமளித்துள்ளார்.

மூலக்கதை