இலங்கை: நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட நில அதிர்வில் புதையுண்ட வீடு

BBC  BBC
இலங்கை: நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட நில அதிர்வில் புதையுண்ட வீடு

இலங்கை, நுவரெலியா மாவட்டம், கினிகத்தேனை பிரதேசத்தில், இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நில அதிர்வின் போது, நிலம் தாழ இறங்கியதன் காரணமாக மக்கள் குடியிருப்பொன்று மண்ணுக்குள் புதையுண்டுள்ளது.

கினிகத்தேனை பொல்பிட்டிய பகுதியில் நிகழ்ந்த நில அதிர்வில், 50 - 60 அடி வரையில் நிலம் இறங்கியுள்ளதாக உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தில் நான்கு வீடுகளிலும், நிலத்திலும் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, இங்கு வசித்து வந்த குடியிருப்பாளர்கள், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதால், பொது மக்களுக்கு சேதங்கள் இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

அந்த பிரதேசத்தில், புதிதாக தனியார் மற்றுமோர் மின் உற்பத்தி மையமொன்றை ஆரம்பிப்பதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதற்கான சுரங்க பாதைகள் அமைப்பதற்கான மலைகள் வெடி வைத்து தகர்க்கப்படும் போது, இந்த நில அதிர்வு நடைபெறுவதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை