சோனியா காந்திக்கு தோள்பட்டை அறுவை சிகிச்சை

BBC  BBC
சோனியா காந்திக்கு தோள்பட்டை அறுவை சிகிச்சை

இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர், சோனியா காந்திக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, காயம் ஏற்பட்டதை அடுத்து, கடந்த புதன்கிழமை டெல்லி கங்காராம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு சோனியா காந்தியின் உடல்நிலை தேறிவருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்கா சென்ற சோனியா காந்தி, வெளியில் தெரிவிக்கப்படாத மருத்துவ காரணங்களுக்காக சிகிச்சை பெற்றுத் திரும்பினார்.

கடந்த 2014-ல் நோய் தொற்றுக்காக டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். 2013-ல் நாடாளுமன்றத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சில மணி நேரங்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசியில் பிரசாரம் செய்து வந்த சோனியா காந்திக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டது. மேலும், நிகழ்ச்சியின்போது, தவறி விழுந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

வியாழக்கிழமை இரண்டு மணி நேரம் தோள்பட்டை அறுவை சிகிச்சை நடைபெற்றது. 69 வயதான அவர், வேகமாக குணமடைந்து வருவதாக கங்கா ராம் மருத்துவமனை அறிக்கையை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர் ஒரு வாரத்தில் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை