இலங்கை அதிபர் தேர்தல்: மாளிகைக்கு வருகிறார் மைத்திரி…வெளியேறினார் ராஜபக்சே

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
இலங்கை அதிபர் தேர்தல்: மாளிகைக்கு வருகிறார் மைத்திரி…வெளியேறினார் ராஜபக்சே

இலங்கையின் புதிய அதிபராக இன்று மாலை மைத்திரிபால சிறிசேனா பதவியேற்கவிருக்கிறார்.

நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை தோற்கடித்து மைத்திரிபால முன்னிலை ஆதிக்கம் பெற்றுள்ளார்.

இன்று மாலை இலங்கை அதிபராக சிறிசேனா பதவி ஏற்பதாக உள்ளதால் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மைத்ரி பால சிறிசேனா நன்றி

வாக்களித்த மக்களுக்கு மைத்ரி பால சிறிசேனா நன்றி தெரிவித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல், நாட்டை நல்வழியில் நடத்தப் போவதாக சிரிசேனா இலங்கை மக்களுக்கு உறுதி அளித்துள்ளார்.

சிறிசேனாவுக்கு அதிக வாக்குகள்

தமிழர்கள் வசிக்கும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் சிறிசேனாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது. சிங்களர்கள் வசிக்கும் பகுதியிலும் சிறிசேனாவுக்கு அதிக ஆதரவும் பெற்றுள்ளார்.

மைத்ரி பால சிரிசேனா 75.67 சதவீத வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார். மகிந்த ராஜபக்சே 22 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

இலங்கையின் புதிய அதிபர் சிறிசேனாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், அமைதியான எதிர்காலம் அமைய இலங்கை மக்களுக்கும் பிரதமர் மோடி வாழ்த்துக்ள் தெரிவித்துள்ளார்.

தோல்வியை ஒப்புகொண்டார் ராஜபக்சே

இலங்கை அதிபர் தேர்தலில் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொண்ட ராஜபக்சே அமைச்சரவைக் கூட்டத்துக்குப்பின் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

மூலக்கதை