சுவாதி குடும்பத்தினருக்கு திருமாவளவன் நேரில் ஆறுதல் : அரசு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க கோரிக்கை

TAMIL CNN  TAMIL CNN
சுவாதி குடும்பத்தினருக்கு திருமாவளவன் நேரில் ஆறுதல் : அரசு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க கோரிக்கை

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில்நிலையத்தில் மர்ம நபரால் படுகொலை செய்யப்பட்ட கம்ப்யூட்டர் என்ஜினீயர் சுவாதியின் குடும்பத்தினருக்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், மாநில செயலாளர் இரா.முத்தரசன், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர் நடிகை குஷ்பூ உள்பட அரசியல் கட்சி பிரமுகர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறி இருந்தனர்.

இந்தநிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை சூளைமேடு தெற்கு கங்கை அம்மன் தெருவில் உள்ள சுவாதியின் வீட்டுக்கு நேற்றிரவு 7.30 மணியளவில் சென்றார்.

சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன் மற்றும் குடும்பத்தினர், உறவினர்களுக்கு தொல்.திருமாவளவன் ஆறுதல் கூறினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறும்போது, சுவாதி குடும்பத்துக்கு அரசு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு அனைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும். சுவாதி குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.’ என்றார்.

மூலக்கதை