இந்தோனேசியாவில் வாழும் 192 கிலோ எடையுடைய சிறுவன்… (Photos)

TAMIL CNN  TAMIL CNN
இந்தோனேசியாவில் வாழும் 192 கிலோ எடையுடைய சிறுவன்… (Photos)

உலகிலே அதிக உடல்பருமனுள்ள பத்து வயது சிறுவன் கண்டறியப்பட்டுள்ளார். இந்தோனேசியாவை சேர்ந்த ஆர்யா பேர்மன என்ற 10 வயது சிறுவன் 192 கிலோகிராம் நிறையினை கொண்டுள்ளார்.

இச்சிறுவனுக்கு சாதாரன உடைகள் அணியமுடியாமையால் சாரத்தினை மட்டுமே உடையாக அணிந்து வருகின்றார்.

இந்தோனேஷியா உள்ள மேற்கு ஜாவா மாகாணத்தில் இருந்து, ஆர்யா தூரம் நடக்க முடியாமையால் படிப்பும் கைவிடப்பட்டள்ளது.

குறித்த சிறுவனின் தாய் ரோகயாய் தெரிவிக்கையில்,

எனது மகனுக்கு நிரந்தர பசியெடுக்கும், ஒரு வேளை உணவில் இரு பெரியவர்களின் உணவுகளை உண்ணும் திறன் கொண்டவர். உணவு உண்ணுவதும் உறங்குவதுமே அவனின் அன்றாட நடவடிக்கையாகும். உறங்காத வேளையில் நீர்தடாகத்தில் படுத்து இருப்பான்.

இப்போது எனது மகனுக்கு வழங்கும் உணவுகளை குறைத்துள்ளோம் என்று தெரிவித்தார்.

மூலக்கதை