எறும்புக்குக் கூட தொந்தரவு கொடுக்காத இளகிய மனம் படைத்த சுவாதி!- அந்தணர் முன்னேற்றக் கழகம் இரங்கல்

TAMIL CNN  TAMIL CNN
எறும்புக்குக் கூட தொந்தரவு கொடுக்காத இளகிய மனம் படைத்த சுவாதி! அந்தணர் முன்னேற்றக் கழகம் இரங்கல்

எறும்புக்குக் கூட தொந்தரவு கொடுக்காத இளகிய மனம் படைத்தவர் சுவாதி என்று அந்தணர் முன்னேற்றக் கழகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்தணர் முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

இன்று அந்தணர் முன்னேற்ற கழக சார்பாக ,இறைவனடி சேர்ந்த செல்வி சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது சித்தப்பா கோவிந்தராஜன் மற்றும் குடும்ப உறவுகளை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க அந்தணர் முன்னேற்ற கழகத்தின் மாநில இளைஞரணி தலைவர் பாலாஜி ஷர்மா, மாநில ஆன்மீக அணி செயலாளர் இராமசந்திர குருக்கள், தென்சென்னை இளைஞரணி தலைவர் சண்முகம் குருக்கள், தென்சென்னை அமைப்பு செயலாளர் மணிகண்டன் குருக்கள், காஞ்சி மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் ஐயர், மாநில ஊடகதுறை செயலாளர் வெங்கட்ராமன் ஐயர் ஆகியோர் சென்றனர்.

1. ஒரு அப்பாவி தெய்வநம்பிக்கையுள்ள பிராமண பெண் ,அடையாளம் தெரியாத ஒரு கயவனால் அநியாயமாக கொலை செய்யப்பட்டிருக்கிறாள்.

2. தினமும் காலையில் சுவாமியிடம் உலக மக்கள் அனைவரும் நலமாக வாழ பிரார்த்தனை செய்யும் பெண்,சம்பவம் நடந்த அந்த வெள்ளியன்று கூட கிளம்பும் சமயம் வீட்டு வாசலில் கூட்டமாக சென்ற பத்து எறும்பை கூட தொந்தரவு செய்யாத ஒரு இளகிய மனம் படைத்த பெண்.

3. மறைந்த செல்வி சுவாதியின் மரணத்தை ஜாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் பேசி அந்த குடும்பத்தின் நிம்மதியை தயவு செய்து கெடுத்து விடாதீர்கள்.

4. முகநூல், வாட்ஸ்அப் மற்றும் ஊடகங்கள் அந்த பெண்ணின் மரணத்தை பற்றி தேவையில்லாத விமர்சனம் மூலம் கொச்சைப்படுத்தாதீர்கள்.

5. அவரது நடத்தையை உண்மை விவரம் தெரியாமல் களங்கப்படுத்தாதீர்கள்.

6. தினமும் சுந்தரகாண்டம் பாராயணம் செய்த பெண்ணுக்கு அவப்பெயரை உண்டாக்காதீர்கள்.

7. காவல்துறை உடனடியாக சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

8. தமிழக அரசே எம்குலப் பெண்களுக்கு தேவையான பாதுகாப்புக்களை செய்து தர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

9. ரயில்வே நிலையங்களில் சிசிடிவி பொருத்த வேண்டும்.

இதுபோன்ற கொலைகள் செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்று மனவேதனையுடன் தெரிவித்து கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை