நளினி வழக்கை திகதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்

TAMIL CNN  TAMIL CNN
நளினி வழக்கை திகதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைதண்டனை அனுபவித்து வரும் நளினி, தன்னை விடுதலை செய்யக் கோரி தொடர்ந்த வழக்கில், சென்னை ஐகோர்ட் தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை ஐகோர்ட்டில் ‘ரிட்’ மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்று தமிழக அரசு ஒரு கொள்கை முடிவு எடுத்து, 1994–ம் ஆண்டு அரசாணையும் பிறப்பித்துள்ளதை சுட்டிக் காட்டியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்றுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில், நளினி வழக்கு விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.

இதனிடையே, 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

மூலக்கதை