ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு மையத்தில் உறுப்பினரானது இந்தியா!

TAMIL CNN  TAMIL CNN
ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு மையத்தில் உறுப்பினரானது இந்தியா!

ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு மையத்தில் இந்தியா இன்று (திங்கட்கிழமை) உறுப்பினர் ஆகியுள்ளது. இதன்மூலம், இரசாயன ஆயுதங்கள், தொழில்நுட்பங்கள், அணுசக்தி உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் சர்வதேச அமைப்பான ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பில் (எம்.டி.சி.ஆர்) இந்தியா இணைந்துள்ளது.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் லக்ஸம்பர்க் உள்ளிட்ட நாடுகளின் முன்னிலையில், இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

34 உறுப்பினர்களைக் கொண்ட ஏவுகணை தொழில் கட்டுப்பாட்டு மையத்தில் உறுப்பினராக சேர்வதற்கு இந்தியா கடந்த ஆண்டு விண்ணப்பம் செய்தது.

எனினும், அணுசக்தி வினியோக நாடுகள் குழுவில் இந்தியா உறுப்பினராக சேரும் முயற்சிக்கு சீனா உட்பட்ட சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது இந்த அமைப்பில் இந்தியா இணைந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூலக்கதை