மின்சாரம் தாக்கி கர்ப்பிணி பலி காப்பாற்ற முயன்ற கணவனும் பலி

TAMIL CNN  TAMIL CNN
மின்சாரம் தாக்கி கர்ப்பிணி பலி காப்பாற்ற முயன்ற கணவனும் பலி

சென்னையை அடுத்த ஜல்லடியன்பேட்டை பத்மாவதி நகரை சேர்ந்தவர் சவுந்திரராஜன் (வயது 31). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சுபத்திரா (25). இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது. சுபத்திரா தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

நேற்று மாலை சுபத்திரா தனது கணவருடன் சேர்ந்து வீட்டின் மாடியில் நின்று மல்லி செடியில் இருந்து இரும்பு கம்பியை கொண்டு பூக்களை பறித்துக் கொண்டு இருந்தார்.
சுபத்திரா பூ பறிக்க பயன்படுத்திய இரும்பு கம்பி எதிர்பாராதவிதமாக அருகில் சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியில் பட்டது. இதில் மின்சாரம் தாக்கி சுபத்திராவின் இடது கை கருகியது.

இதைக்கண்டதும் மனைவியை காப்பாற்ற சவுந்திரராஜன் முயன்றபோது, அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் கணவன்–மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டு பலியானார்கள்.

இவர்களது சத்தம் கேட்டு சவுந்திரராஜன் தந்தை செல்வக்குமார் மகன் மற்றும் மருமகள் ஆகியோரை தொட்டபோது மின்சாரம் தாக்கி அவரும் தூக்கி வீசப்பட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பள்ளிக்கரணை பொலிஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு பலியான இருவரது உடல்களையும் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. காயமடைந்த செல்வகுமார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுபற்றி பள்ளிக்கரணை பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மூலக்கதை