சுடுவதற்கு முன்பு கடைசி நிமிடங்களில் அமெரிக்க கொலையாளி செய்தது என்ன? பேஸ்புக் பதிவால் அம்பலம்

TAMIL CNN  TAMIL CNN
சுடுவதற்கு முன்பு கடைசி நிமிடங்களில் அமெரிக்க கொலையாளி செய்தது என்ன? பேஸ்புக் பதிவால் அம்பலம்

ஆர்லான்டோ நகரில் ஓரினச் சேர்க்கையாளர் கிளப்பில் துப்பாக்கி சூடு நடத்தி 49 பேரை கொலை செய்த உமர் மதீன் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டார். அவர் தாக்குதலுக்கு முன்பாக பேஸ்புக்கில் போட்ட பதிவுகளை வைத்து பார்க்கும்போது, ஓரினச்சேர்க்கையாளர்களை விட அமெரிக்கா மீதே அதிக கோபம் இருந்திருப்பது தெரியவந்துள்ளதாம். ஓரினச்சேர்க்கையாளர்களை கண்டால் உமருக்கு பிடிக்காது என்று அவரது தந்தை சித்திக் பேட்டியளித்திருந்த நிலையில், உமரே ஒரு ஓரினச்சேர்க்கையாளர்தான் என்று அவரது முன்னாள் மனைவி தெரிவித்திருந்தார்.

எனவே, கொலைக்கான காரணம் என்ன என்பதில் குழப்பம் ஏற்பட்டது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்ற நிலையில், அந்த அமைப்பால் மூளைச் சலவை செய்யப்பட்டுதான் உமர் மதீன் தாக்குதல் நடத்தியிருக்க கூடும் என்ற சந்தேகம் அமெரிக்க புலன்விசாரணை அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

அதிகாரிகளின் சந்தேகத்தை உறுதி செய்யும்வகையில் மற்றொரு ஆதாரம் அவர்களுக்கு கிடைத்துள்ளது. உமர் மதீனின் பேஸ்புக் பதிவுகளை சோதித்து பார்த்தபோது இந்த தகவல் கிடைத்துள்ளது.

துப்பாக்கி சூடு நடத்த சில மணித்துளிகள் முன்புவரை பேஸ்புக்கில் உமர் மதீன் பிசியாக இருந்துள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளை அமெரிக்கா கொன்று குவித்துவருவதாக அவர் பேஸ்புக்கில் கோபத்தில் கருத்துக்களை கூறியுள்ளார்.

இதுதொடர்பாகவே அவர் கூகுளில் நிறைய சர்ச் செய்தும் வந்துள்ளார். மேற்கத்திய நாடுகள் மீது கடுமையான கருத்துக்களை பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். இப்படி தன்னையே வெறியேற்றிக்கொண்ட பிறகுதான் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்த விவகாரத்தில், பேஸ்புக் நிறுவன தலைமை அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க்கின் உதவியை அமெரிக்க பாதுகாப்பு செனட் குழு நாடியுள்ளது. உமரின் பேஸ்புக் நடவடிக்கைகள் குறித்த முழு தகவலை தங்களுக்கு வழங்குமாறு ஸக்கர்பெர்க்கிற்கு செனட் குழு கடிதம் எழுதியுள்ளது.

மூலக்கதை