அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் கணினி அமைப்பு ரஷிய அரசால் சட்ட விரோதமாக ‘ஊடுருவல்’

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் கணினி அமைப்பு ரஷிய அரசால் சட்ட விரோதமாக ‘ஊடுருவல்’

ரஷிய அரசைச் சார்ந்த, கணினி அமைப்பை சட்டவிரோதமாக உடைப்பவர்கள், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் பற்றிய தகவல்களை ஆராய தங்களின் கணினி அமைப்பை சட்டவிரோதமாக ஊடுருவி உள்ளனர் என ஜனநாயகக் கட்சியை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மின்னஞ்சல் மற்றும் இணையத்தில் நடந்த உரையாடல்கள் திருப்பட்டுள்ளதாகவும், ஆனால் தனிநபர் மற்றும் நிதி சார்ந்த தகவல்கள் திருடப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹிலரி கிளிண்டன், டொனால்ட் டிரம்ப் ஆகியோரின் கணினி வலைஅமைப்புகள் மற்றும் குடியரசுக் கட்சியின் அரசியல் நடவடிக்கை குழுக்கள் ஆகியவைகளும் இந்த ரஷிய குழுக்களின் இலக்காக இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த கணினி அமைப்பை ஊடுருவும் நாச வேலையில் தாங்கள் ஈடுபடவில்லை என ரஷியா மறுத்துள்ளது.

மூலக்கதை