உறவுக்கு மறுத்த கணவனை உருட்டுக் கட்டையால் தாக்கி கொன்ற பெண்

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
உறவுக்கு மறுத்த கணவனை உருட்டுக் கட்டையால் தாக்கி கொன்ற பெண்

உடல் உறவுக்கு ஒத்துழைக்காத கணவனை, அவரது மனைவி கட்டையால் அடித்துக் கொன்ற விவகாரத்தில், அந்த பெண்மணிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளது.

அகமதாபாத் சாரதாநகரில் வசிப்பர் விமலா வகீலா(54). 2013 நவம்பர் மாதம், 2ஆம் தேதியன்று, இவர் தாந்து கணவரை உடல் உறவுக்கு அழைத்துள்ளார். ஆனால், அதில் நாட்டமில்லாத அவரது கணவர் அதை தவிர்த்துவிட்டார்.

இதனால், ஆத்திரமடைந்த விமலா நீயெல்லாம் ஆம்பளையா? உனக்கு ஆண்மையே இல்லையா? என்று கிண்டலடித்துள்ளார். அதன் பின்னும் அவரது கணவர் அசைந்து கொடுக்கவில்லை. அதைக்கண்டு கோபமடைந்த விமலா, வேறு பெண்ணுடன் அவரது கணவருக்கு தொடர்பு இருப்பதாகவும், அதனால்தான் தன்னை திருப்திபடுத்தவில்லை என்று அவரிடம் சண்டை போட்டுள்ளார்.

இதையடுத்து அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், அருகிலிருந்த உருட்டுக் கட்டையை எடுத்து , அவரது கணவரின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதன்பின், போலீசாரிடம் சென்ற விமலா, தனது கணவரை யாரோ அடித்து கொலை செய்து விட்டதாக பொய் புகார் கொடுத்துள்ளார். ஆனால், போலீசாரின் விசாரணையில் விமலாதான் தனது கணவரை கொன்றார் என்பது தெரிய வந்தது.

இந்த வழக்கு அகமதாபாத் நகர அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. விமலா மீதான குற்றச்சாடு நிருபணம் ஆகியுள்ளதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 2000 அபராதமும் விதிக்கப்பட்டது. அந்த அபராதத்தை கட்ட தவறினால், மேலும் ஆறு மாத காலம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மூலக்கதை