51 வயது ஆணுக்கு 14 வயது சிறுமியை பரிசாக அளித்த பெற்றோர்!- அமெரிக்காவில் அதிர்ச்சி (Video)

TAMIL CNN  TAMIL CNN
51 வயது ஆணுக்கு 14 வயது சிறுமியை பரிசாக அளித்த பெற்றோர்! அமெரிக்காவில் அதிர்ச்சி (Video)

அமெரிக்காவில் பணக் கஷ்டத்தில் இருந்தபோது உதவியதால் 51 வயது ஆணுக்கு 14 வயது சிறுமியை பெற்றோர் பரிசாக அளித்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள பென்சில் வேனியாவை சேர்ந்தவர் லீ கப்லான். வயது 51. இவர் மீது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜென்பெட்ஷ் என்ற பெண் போலீசில் புகார் செய்தார். அதில் இவரது வீட்டில் சந்தேகப்படும் நிலையில் ஏராளமான சிறுமிகள் இருப்பதாகவும், அவர்களை இவர் கற்பழித்து கொடுமைப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனவே போலீசார் அவரது வீட்டுக்கு சென்று சோதனையிட்டனர். அங்கு 12 சிறுமிகள் இருந்தனர். அவர்கள் 6 மாத குழந்தை முதல் 18 வயது வரையினர் ஆவர்.

அவர்களில் 18 வயது சிறுமியை அவளது பெற்றோர் டேனியல்-சவில்லா ஸ்டாட்ஷ்பஸ் ஆகியோர் பரிசளித்துள்ளனர். அப்போது அவளுக்கு 14 வயது, டேனியர் தம்பதி கடனில் தத்தளித்து பணக் கஷ்டத்தில் இருந்த போது கப்லான் உதவி செய்து அவர்களது எஸ்டேட்டை மீட்டுக் கொடுத்தனர்.

அதற்கு பரிசாக தனது 14 வயது மகளை அவருக்கு பரிசாக அளித்துள்ளனர். தற்போது அந்த சிறுமிக்கு கப்லான் மூலம் பிறந்த 3 வயது மற்றும் 6 மாதத்தில் 2 குழந்தைகள் உள்ளனர்.

அவர்கள் தவிர மற்ற 11 சிறுமிகளும் யார்? எதற்காக அவர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை.

இதற்கிடையே கப்லானை போலீசார் கைது செய்தனர். சிறுமியை கற்பழித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் சிறுமியின் பெற்றோரும் கைதாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் ரூ.6½ கோடி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

மூலக்கதை