ஜப்பான் தீவுக்குள் புகுந்த சீன போர் கப்பல்: ஜப்பான் கண்டனம்

TAMIL CNN  TAMIL CNN
ஜப்பான் தீவுக்குள் புகுந்த சீன போர் கப்பல்: ஜப்பான் கண்டனம்

தென் சீன கடல் பகுதியில் சென்காகு என்ற தீவு உள்ளது. இந்த தீவு ஜப்பானுக்கு சொந்த மானதாகும்.

ஆனால், இந்த தீவு உள்பட ஜப்பானுக்கு சொந்தமான பல தீவுகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில் சென்காகு தீவு அருகே சீன போர் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. தீவுக்கு அருகே 24 கடல் மைல் தூரத்தில் அந்த கப்பல் நிற்கிறது.

இதற்கு ஜப்பான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஜப்பானில் உள்ள சீன தூதர் சென் யாங்குவரை அழைத்து ஜப்பான் தனது கண்டனத்தை தெரிவித்தது. அந்த கப்பலை உடனடியாக அங்கிருந்து அகற்றும்படி ஜப்பான் கூறியது.

இதற்கிடையே ரஷிய போர் கப்பல் ஒன்றும் அந்த பகுதியில் நடமாடியதாக ஜப்பான் கூறி உள்ளது.

மூலக்கதை