பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் 5 பேருக்கு தூக்கு தண்டனை

TAMIL CNN  TAMIL CNN

பாகிஸ்தானில் கடற்படை அதிகாரிகள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்., பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அந்நாட்டு ராணுவ கோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பாக அந்நாட்டு பிரபல செய்தி நிறுவனமான டான் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த 2014 செப். 6 ல் பாகிஸ்தானில் உள்ள கடற்படை தளத்தில் ஐ.எஸ்., பயங்கராவதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் ஐ.எஸ்., சுக்கு உதவியதாக 5 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக ஓய்வு பெற்ற மேஜர் சையீதுஅகமது கூறுகையில்:

எனது மகன் அகமது மற்றும் 4 அதிகாரிகள் மீதான குற்றம் தொடர்பாக ரகசியமாக விசாரிக்கப்பட்டு ரகசிய தீர்ப்பு அளிக்கப்பட்டடுள்ளது. எனது தரப்பு நியாயத்தை கேட்க கூட நேரம் தரவில்லை. இது தொடர்பாக அடவகேட் ஜெனரலுக்கு கடிதம் எழுதியும் பயனில்லை என்றார்.

இர்பானுல்லா, முகமது அகமது, நசீர், ஹாசீம்நசீர் ஆகிய 5 அதிகாரிகளுக்கும் தண்டனை வெளிப்படையாக அறிவிக்கப்படாமல் இருப்பதால் 5 பேருக்குரிய தண்டனை எப்போது வேண்டுமானாலும் நிறைவேற்றப்படலாம் என அஞ்சுவதாக குற்றவாளியின் ஒருவரான தந்தை ஒருவர் கூறினார்.தற்போது 4 பேரும் கராச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை