ஏர் பிரான்ஸ் விமான பணிப்பெண்களின் சீருடையில் முரண்பாடு!

NEWSONEWS  NEWSONEWS
ஏர் பிரான்ஸ் விமான பணிப்பெண்களின் சீருடையில் முரண்பாடு!

கால்சட்டை மற்றும் தளர்வான ஜாக்கெட்டு அணியவேண்டும் என்பதே ஏர் பிரான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களின் சீருடை ஆகும், மேலும் இவர்கள் விமானத்தை விட்டு வெளியில் செல்கையில் கண்டிப்பாக முடியை மறைக்கும் வண்ணம் தலையில் scarf அணியவேண்டும்.

இந்நிலையில், பிரான்சில் இருந்து ஈரான் தலைநகர் தெக்ரானுக்கு செல்லும் ஏர் பிரான்ஸ் விமானத்தில் பயணிக்கும் பணிப்பெண்கள் முகத்திரை அணியவேண்டும் என Flore Arrighi of the Unac union தெரிவித்தது.

இந்த சட்டதிட்டங்களை மறுக்கும் பெண்களுக்கு, அவர்களது ஊதியத்தில் இருந்து ஒரு தொகையானது கழிக்கப்படும் என தெரிவித்துள்ளது, ஏனெனில், சவுதி அரேபியா போன்ற குறிப்பிட்ட இஸ்லாமிய நாடுகளுக்கு செல்கையில் நாம் இதனை நடைமுறைப்படுத்தி தான் ஆகவேண்டும் என தெரிவித்துள்ளது.

ஆனால், தங்களால் இந்த சீருடையை பின்பற்ற இயலாது எனக்கூறி, ஏர் பிரான்ஸ் விமான பணிப்பெண்கள் மறுத்துள்ளனர்.

மேலும் ஏர் பிரான்ஸ் விமான நிறுவனம் இதுகுறித்து கூறியதாவது, எங்கள் நிறுவனம் பிற வெளிநாட்டு பயணிகளை விரும்புகிறது, ஈரானில், பெண்கள் முகத்திரை அணியவேண்டும் என் சட்டமாகும், ஆனால் அதனை விமானத்தில் பயணிக்கும் பணிப்பெண்களும் பின்பற்ற வேண்டும் என்பது தேவையில்லாத ஒன்றாகும் எனக்கூறியுள்ளது.

இருப்பினும் இது தொடர்பான இறுதி முடிவு இன்னும் வெளியாகவில்லை எனக்கூறியுள்ளது.

மூலக்கதை