சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டுத் தம்பதி மீது இளைஞர்கள் தாக்குதல்

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டுத் தம்பதி மீது இளைஞர்கள் தாக்குதல்

இந்தியாவிற்கு சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டுத் தம்பதி மீது இளைஞர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ராஜஸ்தானின் அஜ்மீர் நகரின் புஷ்கர் பகுதியில் தங்கியிருந்த ஸ்பெயின் தம்பதி, நேற்று மாலை, ஆரவல்லி மலையடிவார பகுதியை பார்வையிட சென்றுள்ளனர்.

அங்கு குடிபோதையில் இருந்த 5 இளைஞர்கள், அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் ஒரு கட்டத்தில் ஸ்பெயின் பெண் வைத்திருந்த பையை பறித்துச் செல்ல இளைஞர்கள் முயற்சித்துள்ளனர்.

அப்போது அதனைத் தடுக்க முயன்ற ஸ்பெயின் பெண்ணின் கணவரை, இளைஞர்கள் தலையில் கல்லால் தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த ஸ்பெயின் சுற்றுலா பயணி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அந்த பெண் பயணி கூறுகையில், நாங்கள் வாடகைக்கு பைக் எடுத்து புஷ்காரில் உள்ள கோவில்களுக்கு சென்றோம்.

அப்போது குழுவாக இருந்த உள்ளூர் ஆண்கள் என்னிடம் தவறாக நடந்துக் கொண்டனர்.

அவர்கள் என்னுடைய பையை பறித்துக் கொண்டனர். என்னுடைய ஆடையை கிழித்துவிட்டனர் என கூறியுள்ளார்.

தகவலறிந்த காவல்துறையினர் தப்பியோடிய இளைஞர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை