சுவிஸில் கார் மீது பயங்கரமாக மோதிய ரயில்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

COOL SWISS  COOL SWISS
சுவிஸில் கார் மீது பயங்கரமாக மோதிய ரயில்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

பேர்ன் மாகாணத்தில் இருந்து InterRegio என்ற பயணிகள் ரயில் இன்று காலை 7 மணியளவில் புறப்பட்டுள்ளது.

ரயில் புறப்பட்ட சில நிமிடங்களுக்கு பின்னர் Oberried மற்றும் Niederried ஆகிய இரு பகுதிகளுக்கு மத்தியில் வரும்போது தண்டவாளத்தின் குறுக்கே ஒரு கார் நின்றுள்ளது.

வேகத்தை கட்டுப்படுத்த முடியாததால் ரயில் கார் மீது பயங்கரமாக மோதி தூள் தூளாக்கி விட்டு சென்றுள்ளது.

எனினும், இந்த விபத்தில் ரயில் பயணிகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

இந்த விபத்து குறித்து Jolanda Egger என்ற பொலிஸ் அதிகாரி பேசியபோது, ‘இன்று அதிகாலை சாலையில் சென்றுக்கொண்டு இருந்த கார் ஒன்று திடீரென தடுமாறி ரயில் தண்டவாளத்தில் ஏறி நின்றுள்ளது.

காரை மேலும் செலுத்த முடியாததால், அதில் பயணித்த அனைவரும் பத்திரமாக வெளியேறியுள்ளனர்.

பயணிகள் வெளியேறிய பிறகு கார் மீது ரயில் மோதியதால், எவருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

கார் மீது ரயில் மோதிய இந்த விபத்தை தொடர்ந்து பிற்பகல் வரை இப்பகுதி வழியாக சென்ற ரயில் சேவைகள் முற்றிலுமாக பாதிப்படைந்தது.

மூலக்கதை