நள்ளிரவில் கடத்தல் கும்பலை வேட்டையாடிய பொலிஸ்: துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி

NEWSONEWS  NEWSONEWS
நள்ளிரவில் கடத்தல் கும்பலை வேட்டையாடிய பொலிஸ்: துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி

தெற்கு பிரான்ஸில் உள்ள Marseilles என்ற நகரில் கடத்தல் கும்பலின் நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது.

இதே பகுதியில் கடந்தாண்டு பொலிசார் நடத்திய அதிரடி வேட்டையில் 19 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், இந்த பகுதியில் உள்ள 4 அடுக்குமாடி குடியிருப்பில் கடத்தல்காரர்கள் இருப்பதாக பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தகவலை பெற்ற பொலிசார் கடந்த சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் கட்டிடத்திற்குள் அதிரடியாக நுழைந்துள்ளனர்.

அப்போது, பொலிசார் மற்றும் கடத்தல் கும்பலுக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சூடு நிகழ்ந்துள்ளது.

சில நிமிடங்கள் நீடித்த இந்த தாக்குதலின் விளையாக கும்பலை சேர்ந்த 3 பேர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மேலும் 8 பேர் காயமுற்றனர். இந்த தாக்குதலில் பொலிஸ் தரப்பிற்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

இந்த தாக்குதல் குறித்து நகர மேயரான Samia Ghali என்பவர் பேசியபோது, ‘எதிர்கால தலைமுறையினர் அமைதியான வாழ்க்கையை வாழ்வார்கள் என்ற நம்பிக்கை ஏற்படவில்லை.

வன்முறையான இந்த செயல்களை தடுத்து நிறுத்து அரசு இனியும் தயங்க கூடாது’ என கருத்து தெரிவித்துள்ளார்.

மூலக்கதை