அசுர வேகத்தில் காரை ஓட்டியதால் நிகழ்ந்த விபரீதம்: பரிதாபமாக பலியான 7 வாலிபர்கள்

NEWSONEWS  NEWSONEWS
அசுர வேகத்தில் காரை ஓட்டியதால் நிகழ்ந்த விபரீதம்: பரிதாபமாக பலியான 7 வாலிபர்கள்

ஸ்பெயின் நாட்டில் உள்ள Catalonia என்ற நகருக்கு அருகில் உள்ள ஒரு உணவகத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 5 பேர் பணியாற்றி வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று உணவகத்துக்கு புறப்பட்ட இவர்கள் ஐவரும் காரில் அதிவேகமாக பயணம் செய்துள்ளனர்.

அப்போது, எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது பயங்கரமாக மோதிய விபத்தில் கார் அப்பளம் போல் நொருங்கியது.

இந்த கொடூரமான விபத்தில் காரில் பயணத்த 19 முதல் 22 வயதுடைய 5 பிரான்ஸ் குடிமகன்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

எதிரில் மோதிய மற்றொரு காரில் பயணம் செய்திருந்த மோரோக்கோ நாட்டை சேர்ந்த ஒருவரும் மற்றும் கொலம்பியா நாட்டை சேர்ந்த ஒருவரும் பலியானர்.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக தப்பிய ஓட்டுனர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து தொடர்பாக பேசிய அதிகாரி ஒருவர், பிரான்ஸ் குடிமகன்கள் விபத்தில் உயிரிழந்தது தொடர்பாக பிரான்ஸ் வெளியுறவு துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை