வாலிபர் சாப்பிட்ட உணவில் இறந்த எலியின் உடல்: தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு பதிவு

NEWSONEWS  NEWSONEWS
வாலிபர் சாப்பிட்ட உணவில் இறந்த எலியின் உடல்: தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு பதிவு

பிரான்ஸ் தலைநகரான பாரீஸின் 13-வது வட்டத்தில் Carrefour என்ற சூப்பர் மார்க்கெட் இயங்கி வருகிறது.

சில தினங்களுக்கு முன்னர் 28 வயதான வாலிபர் ஒருவர் இந்த சூப்பர் மார்க்கெட்டில் பாஸ்த்தா உணவை வாங்கிச் சென்று அருகில் உள்ள ஒரு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டுள்ளார்.

பாதி உணவை சாப்பிட்ட பிறகு, உணவிற்கு அடியில் இறந்த நிலையில் ஒரு எலியின் உடல் இறந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து வாந்தியும் எடுத்துள்ளார்.

பின்னர், Daunat என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட அந்த உணவை எடுத்துக்கொண்டு சூப்பர் மார்க்கெட்டிற்குள் அவர் சென்றுள்ளார்.

ஆனால், அங்குள்ள மேலாளர் ஒருவர் 10 யூரோவை இழப்பீடாக கொடுத்து வாலிபரை சரிக்கட்ட முயன்றுள்ளார்.

பணத்தை நிராகரித்த அந்த வாலிபர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். மேலும், இறந்துப்போன அந்த எலியின் உடல் சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து வாலிபர் பேசியபோது, ‘உணவில் இறந்த நிலையில் எலி இருந்ததை கண்ட பிறகு என்னால் சரியாக சாப்பிட முடியவில்லை.

இதனால் என்னுடைய உடல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பாஸ்த்தா உணவை தயாரித்து வெளியிட்ட Daunat நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், 4,000 யூரோ வரை இழப்பீடு பெறுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

மூலக்கதை