அம்பாறை மாவட்டத்திற்கு 12ஆவது இடம்!

தமிழ்வின்  தமிழ்வின்
அம்பாறை மாவட்டத்திற்கு 12ஆவது இடம்!

கல்விப்பொது சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அம்பாறை மாவட்டம் 12ஆவது இடம் இந்த இடத்தினை பெறுவதற்கு கார்மேல் பற்றிமா கல்லூரியின் கடின உழைப்பும் ஒரு காரணம் என அந்த கல்லூரியின்
முதல்வர் அருட்தந்தை பிறையினர் செலர் தெரிவித்தார்.

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் இவ்வாண்டு சிறந்த பெறுபேறுகளை பெற்ற 33 மாணவர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும், கல்முனை கல்வி வலயத்திற்கு புதிதாக தமிழ் கோட்டக்கல்வி அதிகாரியாக நியமனம் பெற்று வருகை தந்தருக்கும் ராதிகா திரவியராஜா அவர்களை வரவேற்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வு காலையில் கல்லூரி முதல்வர் அருட்தந்தை பிறையினர் செலர் தலைமையில் சிசிலியா மேரி அரங்கில் நடைபெற்றது.

இதன் போது தொடர்நதும் கருத்து தெரிவித்த அவர்,

கல்விப்பொது சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டம் 67.50 வீதத்தினை பெற்று முதலாவது இடத்தினை பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அம்பாறை மாவட்டம் அகில இலங்கை நீதியில் 12ஆவது இடத்தினை பெற்றுக்கொள்வதற்கு கல்முனை வலயத்தில் உள்ள எமது பாடசாலையே முழு வீச்சாக செயற்பட்டிருப்பது போற்றப்பட வேண்டிய ஒன்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பில் பிரபல்யமான பாடசாலை ஒன்றில் இம்முறை சாதாரண தரப்பரீட்சையில் 25 மாணவர்கள் ஒன்பது பாடங்கிலும் ஏ தரச்சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அந்தச்சாதனைகளை எதிர்வரும் காலங்களிலும் எமது பாடசாலை பெற்றுக்கொள்வதற்கு அயராது உழைக்கும் வகையில், ஐந்தாண்டு திட்டத்தினை முன்வைத்து கற்பித்தல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டை விட இவ்வாண்டு சாதாரணதர பரீட்சையில் உயர் நிலை அடைந்திருக்கின்றது. எதிர்காலத்தில் மேலும் சிறப்பான பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள எமது கல்விச்சமூகம் அயராது பாடுபடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்நிகழ்வில் கல்முனை தமிழ் கோட்டக்கல்வி பிரிவின் பொறுப்பாளர் ராதிகா திரவியராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்க்கது.

மூலக்கதை