கவனத்துடன் ஆராயப்பட வேண்டிய வெடிபொருட்கள் விவகாரம்

தமிழ்வின்  தமிழ்வின்
கவனத்துடன் ஆராயப்பட வேண்டிய வெடிபொருட்கள் விவகாரம்

சாவகச்சேரியில் கண்டெடுக்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் அரசாங்கமும், எதிர்க் கட்சியும் நாட்டின் பாதுகாப்பையும் அதைக் கையாள்வதையும் பற்றி கிளறியுள்ள விசனங்கள் பல கேள்விகளுக்கு இட்டுச் சென்றிருக்கின்றன.

2008ம் ஆண்டு ஜனவரி 29 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்ட சிங்களப் பத்திரிகை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் தற்கொலை அங்கி, நான்கு கிளேமோர் கண்ணிவெடிகள், 12 கிலோ அளவான வெடிபொருட்கள் கொண்ட மூன்று பார்சல்கள், 9 மில்லி மீட்டர் அளவான ஆயுதங்களுடனான இரண்டு பைகள் மற்றும் இரண்டு பட்டரி பைகள் என்பன கடந்த வாரம் சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த வெடிபொருட்கள் ஈழப் போரின் எச்சமிச்சங்களா அல்லது போருக்குப் பின்னர் சாவகச்சேரிக்கு எடுத்துச் செல்லப்பட்டனவா என்பதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வியாகும்.

இந்தக் கேள்விகளை தேசிய பாதுகாப்பு விவகாரம் என்ற வரையறைக்குள் அடக்கி மக்களுக்கு உண்மையைத் தெரிவிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். அதேமாதிரி, எதிர்க் கட்சியும் இதன் மூலம் அற்ப அரசியல் லாபம் பெற முயற்சிப்பதைவிட்டு விட்டு பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, அரசாங்கமோ எதிர்க் கட்சியோ இதற்கான விடையைக் கண்டுபிடிக்க முடியாத நிலையிலேயே இருக்கின்றன.

இது தொடர்பான நீதி விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரச பகுப்பாய்வாளரிடமிருந்து இந்த வெடிபொருட்கள் தொடர்பான அறிக்கை ஒன்றைப் பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் நீதவான் அருனி ஆட்டிகல பயங்கரவாத விசாரணைகள் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதேநேரம், இது தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் பேசும்போது இவ்வாறு தெரிவித்தார். இந்த வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டதற்கும் தேசிய பாதுகாப்புக்கும் ‘பெரும் இடைவெளி’ இருக்கிறது.

அவை ஈழப் போரின் பின்னர் விட்டுச் செல்லப்பட்டவையாக இருக்கலாம். போரின் பின்னரும் அண்மைக் காலங்களில் இவ்வாறான வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. எனவே, இதனால் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கான சாத்தியம் இருப்பதாகக் கூறமுடியாது.

இந்த சம்பவம் இன்னும் விசாரணையில் இருக்கின்ற நிலையில் பாதுகாப்பு செயலாளரின் இந்த அறிவிப்பு அரசாங்கத்துக்கு சிரமம் கொடுக்க ‘கூட்டு எதிர்க் கட்சிக்கு’ நல்லதோர் வாய்ப்பை வழங்கி இருக்கிறது இந்த வெடி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. உண்மையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்கியிருப்பதையே காட்டுவதாக தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கூறியிருக்கிறார்.

அது போதாதென்று இந்த சம்பவத்தால் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து இல்லை என பாதுகாப்பு செயலாளர் கூறுவதால் அவர் பதவி விலக வேண்டுமென்றும் அவர் கூறுகிறார். உத்தியோகபூர்வமாக பதில் கூற முடியாத ஒரு அரச அதிகாரியைச் சாடுவது மிகச் சிறந்த சாணக்கியம் இல்லை என்றாலும் இப்படிப்பட்ட விஷயங்களை ஊதிப் பெருப்பிப்பதில் வீரவன்சவுக்கு நிகர் அவரே.

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் மற்றொரு முன்னாள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் ஆவார். அரசாங்கம் இந்த வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டது பற்றிய உண்மையை மறைப்பதாகவும் அவை வெள்ளவத்தைக்கு கொண்டு செல்லப்படவிருந்ததாகவும் அவர் கூறினார்.

அரசியல் இலாபம் பெறும் நோக்கில் வீரவன்ச அரசாங்கத்தை குறைகூறுகிறார் என்றால் சட்டப் பேராசிரியராகவும். உபவேந்தராகவும், வீதி அமைச்சராகவும் இருந்த பீரிஸின் அசட்டுத்தனமான கருத்துகள் அவருடைய தகுதிக்கு நல்லதல்ல. அரசியலில் கனவானாக நடந்துகொள்வதை பீரிஸ் தவிர்த்து பல ஆண்டுகளாகிவிட்டது.

நன்கு தெரிந்தது தான் என்றாலும் நாடு சிரமமான நல்லிணக்கப் பாதையில் தற்போது அடியெடுத்து வைத்திருப்பதால் அவருடைய அதிர்ச்சியளிக்கும் கருத்துகள் ஆச்சரியமாகவே இருக்கின்றன. அரசாங்கமும் பீரிஸின் கருத்துகளைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

பீரிஸுக்கு இது தொடர்பாக ஏலவே தகவல் தெரிந்ததனால் அவரை விசாரணை செய்ய வேண்டுமென பத்திரிகையாளர் மத்தியில் பேசிய அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க கூறினார்.

பீரிஸ் கூறிய கருத்துக்களுக்காக அவர் உண்மையிலேயே விசாரணை செய்யப்பட வேண்டுமென்றால் பொலிஸார் அவரை முறைப்படி விசாரணை செய்திருக்கலாம். அமைச்சர் கருணாதிலக்க சொல்லிய பின்னர் பொலிஸார் பீரிஸை விசாரிப்பது என்பது அரசியல் நடவடிக்கையாக கருதக்கூடிய அதேநேரம் தேசிய பாதுகாப்புக்கு உள்ள நெருக்கடி அலட்சியம் செய்யப்படுகிறதா என்ற எண்ணத்தையும் தோற்றுவிக்கிறது.

வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக அவர் குற்றத் தடுப்பு புலனாய்வுப் பிரிவினருக்கு அழைக்கப்பட்டது. அவருக்கு மகிழச்சியான விடயமாக இருந்திருக்கும். “பாருங்கள் கண்டுபிடிக்கப்பட்ட வெடி பொருட்கள் பற்றி விசாரணை செய்யாமல் என்னை தொந்தரவு செய்கிறார்கள்” என் அவர் கூறலாம் அல்லவா?

மாறாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கருத்துகள் ஆச்சரியமாக இருக்கின்றன. ஈழப்போரை தானே முடித்து வைத்ததாக கூறும் ராஜபக்ஷ கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்கிவிட்டார்கள் என்று தெற்கில் அலாரம் அடிக்கலாம் என எதிர்பார்க்கப்ப்டடது. ஆனால், அவருடைய கருத்துகள் மீதமாக அமைந்திருந்தன.

வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்ப்டட சம்பவத்தை அற்ப விஷயமாக கருதக்கூடாது என்றும் அதனால் எழுந்துள்ள சந்தேகத்தையும், அச்சத்தையும் நீக்க பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று அவர் கூறியுள்ளார். அரசாங்கத்தைக் குறைகூறாததோ பதவி விலகல்களைக் கோராததோ ரஜபகசவின் கௌரவத்தைப் பாதுகாப்பதாக இருக்கிறது இது.

இவ்விதமிருக்க, குண்டு வெடிப்புகள் அடிக்கடி நிகழ்ந்த முப்பது வருட ஈழப்போரின் துன்பங்களை அனுபவித்த மக்கள் இந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சமப்வத்தால் கலவரமடைந்திருப்பார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. விசாரணைகளை துரிதப்படுத்தி உண்மையைத் தெரிவிக்க வேண்டியது அரசாங்கத்தின் நலன் சார்ந்த விடயம்தான்.

மூலக்கதை